வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் இன்று விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை வட மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். மேலும் லட்சதீவு, கேரள கடலோர பகுதிகளுக்கு நான்கு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது.