Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று காலை 10 மணிக்கு பிளஸ் 1 ரிசல்ட்…. எதிர்பார்ப்பில் மாணவர்கள்….!!!!!

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தன. இதையடுத்து கடந்த ஜூன் 20ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று காலை 10 மணிக்கே பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 9ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடந்தது. இதனைத் தொடர்ந்து ஜூன் 27ஆம் தேதி பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www. tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி மதிப்பெண்களை பார்க்கலாம். மேலும் பள்ளியில் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |