Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கிடையாது… அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை…!!!

தமிழகத்தில் இன்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கமிஷனர் கூறியுள்ளார்.

தமிழக அரசு உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கமிஷனர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், ரேஷன் கடை ஊழியர்கள் வீடு தேடிச் சென்று டோக்கன்கள் வழங்கினார். அந்த பணிகளை விடுமுறை நாட்களான கடந்த ஜூலை 10, ஆகஸ்ட் 7 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் விடுமுறை இல்லாமல் பணியாற்றினர்.

அதனால் ரேஷன் கடைகள் வேலை நாட்களாக இருந்த அந்த நாட்களுக்கு செப்டம்பர் 19, அக்டோபர் 17, நவம்பர் 21 ஆகிய மூன்று விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |