தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தால் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த அரசு தடை விதித்தது. அதன்பிறகு கொரோனா பரவல் குறைந்து நிலையில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதால் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவ கூடிய வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலை வாய்ப்பு மையங்களில் தனியார் துறைகள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றனர்.
இதனால் ஏராளமானவர்கள் வேலை வாய்ப்பை பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும் தனியார் நிறுவனம் மக்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு வழங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்தூர்பேட்டை மாவட்டத்தில் அரசு சார்பில் தொழில் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழில் பயிற்சி நிலையத்தில் வருகின்ற இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசு கழகம், மின் வாரியம் மற்றும் ஆவின் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும்.
இதையடுத்து தொழில் பழகுநர் பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு முதல் கல்வித் தகுதி உடையவர்களை தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை நேரடியாக நிறுவனங்களில் தொழில் பழகுனராக சேர்த்து 3 மற்றும் 6 மாதம் வரை அடிப்படை பயிற்சியும் மற்றும் 1 மற்றும் 2 ஆகிய ஆண்டு வரை தொழில் பழகுனர் பயிற்சிக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்தப் பயிற்சிக்கு அரசால் மாதம்தோறும் 8,500 முதல் 10,000 வரை உதவி தொகையை அந்தந்த நிறுவனம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த தகவல்களுக்கும் 04146-250573 மற்றும் 04146-294989 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.