தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சேலம் மாவட்டம்:-
சங்ககிரி அருகே உள்ள சன்னியாசிப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் இன்று (பிப். 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை படைவீடு, பச்சாம்பாளையம், சங்ககிரி ரயில் நிலையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிப்பட்டி, ஊஞ்சக்கொரை, தண்ணீா்பந்தல்பாளையம், சின்னாகவுண்டனூா், வெப்படை, செளதாபுரம், பாதரை, அம்மன்கோயில், மக்கிரிபாளையம், தலைமடையானூா், திருநகா் பைபாஸ்சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் :-
பொங்கலூர் துணை மின் நிலையத்தில் (பிப்.25) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொங்கலூர் துணை மின்நிலையத் திற்குட்பட்ட பொங்கலூர் , காட்டூர் , தொட்டம்பட்டி , மாதப்பூர் , கெங்கநாயக்கன்பாளையம் , பெத்தாம்பாளை யம் , பொல்லிக்காளிபாளையம் , தெற்கு அவினாசிபா ளையம் , வடக்கு அவினாசிபாளையம் ஒரு பகுதி , உகா யனூர் , என். என். புதூர் , காங்கேயம்பாளையம் , ஓலப்பா ளையம் மற்றும் எல்லப்பாளையம் புதூர் துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.
தேனி மாவட்டம் :-
பெரியகுளம் துணை மின்நிலைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தாமரைக்குளம் உயர் அழுத்த மின் பாதையில் 25, 28, அடுத்த மாதம் 1-ந் தேதி ஆகிய நாட்கள் திறன் மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதனையொட்டி தண்டுபாளையம், ஜே. ஆர். ஆர். நகர், கம்பம் ரோடு, பாரதி நகர், வடுகப்பட்டி, தாமரைக்குளம், மேல்மங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கூறிய நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் :-
கந்தர்வக்கோட்டை பகுதியில் உள்ள ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (பிப்.25) மாதாந்திரமின் பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால் இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டகுலம், மணவிடுதி, சொக்கநாதபட்டி, சோத்துப் பாளை, மாந்தாங்குடி, காட்டு நாவல், மட்டயன்பட்டி, மங்களத்துபட்டி, கந்தர்வகோட்டை, அக்கச்சிபட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன்பட்டி, சிவன்தான் பட்டி, வீரடிபட்டி, புதுப்பட்டி, நம்புரான் பட்டி, மோகனூர், பல்லவராயன்பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுபட்டி, மெய்குடி பட்டி, வெள்ளாள விடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
கன்னியாகுமரி மாவட்டம் :-
தோவாளை மின் வினியோகத்துக்கு உட்பட்ட வெள்ளமடம் உயர் அழுத்த மின்பாதையில் 26- ந்தேதி பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஆதிச்சன்புதூர், கண்ணன்புதூர் , லாயம் , அனந்தபத்மநாபபுரம் , லாயம் விலக்கு , வெள்ளமடம் , நாக்கால்மடம் , திருப்பதிசாரம் , பீமநகரி , புளியன்விளை , சந்தவிளை , தாழக்குடி , ஈசாந்திமங்கலம் , நாவல்காடு , ஞானதாசபுரம் ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது.