தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 4 (நேற்று முன்தினம்) வரை நடைபெற்றது. இதற்கிடையில் மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிப்ரவரி 6 (இன்று) முதல் காணொளி மூலமாக முதல்வர் முக.ஸ்டாலின் பரப்புரையை தொடங்க உள்ளார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிப்…6 (இன்று) முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொளி மூலமாக பரப்புரை செய்வார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.