தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், ” தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று மழைக்கு வாய்ப்புள்ளது. அவற்றில் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்யும்” என்று தெரிவித்துள்ளது.