தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (மார்ச்.29) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் :-
நாமக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று (மார்ச்.29) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மெட்டாலா துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மெட்டாலா, ஆயில்பட்டி, பிலிப்பாகுட்டை கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜாபாளையம், உடையார்பாளையம், கார்கூடல்பட்டி, உரம்பு, காட்டூர், காமராஜ்நகர், மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரியகோம்பை. பெரப்பன்சோலை, மூலக்குறிச்சி, பெரியகுறிச்சி, ஊந்தாங்கல், கரியாம்பட்டி வரகூர்கோம்பை, நரியன்காடு, நவக்காடு. பீலசோலை, பகுடிபுதுச்சாவடி ஒலையாறு, தெம்பலம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இளநகர் துணை மின்நிலையத்தில் இன்று (மார்ச்.29) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலகவுண்டம்பட்டி, செக்குப்பட்டிபாளையம், எளையாம்பாளையம், ஜேடர்பாளையம், கூத்தம்பூண்டி, மானத்தி, செருக்கலை, பெரியமணலி, கோக்கலை, மாணிக்கம்பாளையம், பகுதிகளில் இளநகர், இலுப்புலி, தொண்டிப்பட்டி, மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை :-
பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று (மார்ச்.29) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
அடையார் – ஈஞ்சம்பாக்கம் பகுதி:
பிராத்தான திரையரங்கம் மற்றும் சாலை, ராயல் என்கிளேவ், சாய்பாபா கோவில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி – அலமாதி பகுதி :-
பங்காரம்பேட்டை கிராமம், வீரபுரம் கிராமம், பாரதி நகர், வேல்டெக் ஜங்கஷன், மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி- புழல் பகுதி :-
புழல் பகுதி குடிநீர் வாரியம், புழல் மத்திய சிறை I, II, III முழுவதும். இன்று மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தேனி மாவட்டம் :-
தேனி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் கோட்டூர், கூளையனூர், சீலையம்பட்டி, காமாட்சிபுரம், ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை, தர்மாபுரி, வெள்ளையம்பாள்புரம், குப்பிநாயக்கன்பட்டி, பூமலைக்குண்டு, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது என்று மின் பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் :-
வடக்கன்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அங்கு இருந்து மின்வினியோகம் பெறும் கால்கரை, வேப்பிலாங்குளம், வடக்கு பெருங்குடி, தெற்கு பெருங்குடி, லெப்பைகுடியிருப்பு, வடக்கன்குளம், அழகனேரி, அடங்கார்குளம், சிவசுப்பிரமணியபுரம், சங்கு நகர், சுற்றுப்புற கிராமங்களுக்கும் மற்றும் தனியார் காற்றாலைகளுக்கும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் :-
சிவகிரி விஸ்வநாதபேரி, தேசியம்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிக்குளம், ராயகிரி மேலகரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகபட்டி, தரணி நகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, அருளாச்சி என்ற திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்செவல், சுப்ரமணியாபுரம் உள்ளார், வெள்ளானைக்கோட்டை, தாருகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று கடையநல்லூர் மின்வினியோக செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.