தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (மார்ச்.31) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் :-
விருதுநகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் விருதுநகர் துணை மின் நிலையம் மூலம் மின் வினியோகம் பெறும் பகுதிகளான விருதுநகர் நகர் பகுதி, புறநகர் பகுதிகளான பெரியவள்ளிகுளம், ஆர்.எஸ். நகர், அல்லம்பட்டி, லட்சுமி நகர், என்.ஜி.ஓ. நகர், வேல்சாமி நகர், கருப்பசாமி நகர், வடமலைக்குறிச்சி, பேராலி, பாவாலி, ஆமத்தூர், வெள்ளூர், மூளிப்பட்டி, சத்திர ரெட்டியபட்டி,பாண்டியன் நகர், முத்தால் நகரின் ஒரு பகுதி, கே.கே.எஸ்.எஸ்.என். நகர், சத்யசாய் நகர், காந்திநகர், பேராலிரோடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக மின் வாரிய நிர்வாக செயற்பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.