Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (மார்ச்.1) முக்கிய பகுதிகளில் மின்தடை…. இதோ முழு விவரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் இன்று (மார்ச்.1) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக மருத்துவக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஆர்.ஆர்.நகர், காவேரி நகர், எலிசா நகர், நூற்பாலை, மாதாகோட்டை, சோழன் நகர், தமிழ் பல்கலைக்கழகம் மேல வசத்தாச் சாவடி, பிள்ளையார்பட்டி, ஆலக்குடி, மானோஜிபட்டி, ரெட்டிபாளையம் ரோடு, சிங்கப் பெருமாள் குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (மார்ச்.1) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

அதேபோல் சேலம் மாவட்டம் நெத்திமேடு துணை மின் நிலையத்தில் இன்று (மாா்ச்.1) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், நான்கு சாலை, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவாரி, சூரமங்கலம், மெய்யனூா், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

சேலம் மாவட்டம் மேட்டூர் மின் பகிர்மான வட்டம், எடப்பாடி கோட்டத்திற்கு உட்பட்ட பூலாம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், இன்று (மாா்ச் 1) காலை 9 மணி முதல் நண்பகல் வரை பூலாம்பட்டி, பில்லக்குறிச்சி, கூடக்கல், வன்னிய நகர், வளைய செட்டியூர், கள்ளுக்கடை. சித்தூர், வெள்ளரி வெள்ளி, நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடங்கம், பூமணியூர், பொன்னம்பாளையம் மற்றும் புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

Categories

Tech |