Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (மார்ச்.3) இத்தனை மாவட்டங்களில் மின்தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம் :-

புதன்சந்தை துணை மின் நிலையத்தில் இன்று (மார்ச்.3) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் மின்னாம்பள்ளி, செல்லப்பம்பட்டி, புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏளூர், அம்மாபாளையம், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், புதுச்சத்திரம், கொளிஞ்சிப்பட்டி, பாச்சல், பிடாரிப்பட்டி, ஏ. பு. பாளையம், மூணுசாவடி, ஏ. பு. பாளையம், களங்காணி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

தர்மபுரி மாவட்டம் :-

பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை மறுநாள் (மார்ச்.5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வெங்கடசமுத்திரம், பாப்பிரெட்டிப்பட்டி, காளிப்பேட்டை, மெணசி, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி, H. புதுப்பட்டி, பாப்பம்பாடி, அ. பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, கவுண்டம்பட்டி, எருமியாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கோவை மாவட்டம் :-

ஆனைமலை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மாசாணியம்மன் கோவில் உயர்மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளதால் ஆனைமலை நகரம் சிங்கநல்லூர் ஒரு பகுதி, தாத்தூர் போன்ற பகுதிகளில் இன்று (மார்ச்.3) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

தேனி மாவட்டம் :-

ஆண்டிபட்டி உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் ஆண்டிபட்டி, டி. சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, ஏத்தக்கோயில், ராஜதானி, பாலக்கோம்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (மாா்ச்.3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என பெரியகுளம் கோட்ட அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தேவாரம் துணை மின் நிலையத்தில் இன்று (மாா்ச் 3) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை தேவாரம், மூணாண்டிபட்டி, மீனாட்சிபுரம், போ.ரெங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, தே.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, தே.சொக்கலிங்காபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

மதுரை மாவட்டம் :-

பேரையூர் மற்றும் சாப்டூர் துணை மின்நிலையங்களில் இன்று (மார்ச் 3) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையில் பேரையூர், பி. தொட்டியபட்டி, சாலிசந்தை, சிலைமலைப்பட்டி, கூவலபுரம், ராவுத்தன்பட்டி, மேலப்பட்டி, பாரப்பத்தி, தும்பநாயக்கன்பட்டி, சாப்டூர், பழையூர், செம்பட்டி, அத்திபட்டி, மைனூத்தாம்பட்டி, வண்டாரி, அணைக்கரைப்பட்டி, மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை ஏற்படும்.

மதுரை மாநகர் பகுதியில் குருவிக்காரன் சாலை, ஆசாரி தோப்பு, மதிச்சியம், விவேகானந்தா தெரு, சப்பாணி கோயில் தெரு, ஜவஹர் தெரு ஆகிய பகுதிகளில் இன்று (மார்ச் 3)அன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை செய்யப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம் :-

ஆசாரிபள்ளம் வினியோக பிரிவுக்கு உட்பட்ட சாந்தபுரம் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று (மார்ச்.3) நடக்கிறது. எனவே , இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை ஆசாரிபள்ளம், பாம்பன்விளை, தோப்பூர், மேலசங்கரன்குழி , பேயோடு , சாந்தபுரம் , சூரப்பள்ளம் , சரல் , அரசன்விளை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.

Categories

Tech |