தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசியில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Categories