தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் சென்னை எழும்பூரில் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்பராமரிப்பு பணிக்காக மின்தடை ஏற்படும்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கமுதி சுற்று வட்டாரங்களான அபிராமம், முதுகுளத்தூர், கமுதி நகர், செங்கபடை, பேரையூர், மண்டலமாணிக்கம், கீழராமநதி, பார்த்திபனூர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் தடை ஏற்படும்.
தேனி மாவட்டம் சின்னமனூர் பகிர்மான வட்டம் வண்ணாத்தி பாறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆங்கூர்பாளையம், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்க முத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத் தேவன் பட்டி, லோயர்கேம்ப், மணலாறு, ஹைவேவிஸ், மேகமலை, இரவங்கல்லாறு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.