Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் அ.மேட்டூர் துணை மின் நிலையத்தில் இன்று  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, பூமிதானம், கோரையாறு, கவுண்டர்பாளையம், அ.மேட்டூர், விஜயபுரம், அரும்பாவூர், பெரியசாமிகோவில், அரசடிகாடு, மேலக்குணங்குடி, வேப்படி, பாலக்காடு, சீனிவாசபுரம், பூலாம்பாடி, கள்ளப்பட்டி, கடம்பூர் ஆகிய ஊர்களில் மின்சார வினியோகம் இருக்காது.

ஈரோடு மாவட்டத்தில் கூகலூர் மற்றும் கொளப்பலூர் துணை மின் நிலையத்தில், இன்று பரமாரிப்பு பணி நடக்கிறது. இதனால் பொன்னாச்சிபுதூர், தாழைக்கொம்புதூர், பொம்மநாயக்கன்பாளையம், ஒத்தக்குதிரை பகுதிகளில், காலை 9:00 முதல், மதியம் 12:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும். கொளப்பலூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட, காவேரிபாளையம், செட்டியாம்பாளையம், மல்லநாயக்கனூர், மேட்டுவலவு, மணியக்காரன்புதூர், மகா லட்சுமி நகர், கருக்குப்பாளையம், பாச்சாங்காட்டுப்புதூர், நீலாக்கவுண்டம்பாளையம் மற்றும் அழகுக்கவுண்டம்பாளையம் பகுதியில், காலை 9:00 முதல், மதியம் 2:00 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதேபோல ஊராட்சிகோட்டை துணை மின் நிலையம், மூன்று ரோடு மின் பாதையில், நாளை பராமரிப்பு நடக்கிறது. இதனால் மூன்று ரோடு, மேட்டுப்பாளையம், வரதநல்லூர், சன்னியாசிப்பட்டி, கூலிக்காரன்பாளையம், ஆண்டிபாளையம் பகுதிகளில், காலை, 10:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுகிறது. எனவே இன்று  காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை பல்லடம் அண்ணாநகர், மின்நகர், காளிவேலம்பட்டி, லட்சுமிமில், பெரும்பாளி, செம்மிபாளையம், சுக்கம்பாளையம், ஊஞ்சப்பாளையம், ராசக்கவுண்டம்பாளையம், சின்னியகவுண்டம்பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம் பட்டி, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.

நாகப்பட்டினம் மாவட்டம் மணல்மேடு துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெரும் மணல்மேடு, ராதாநல்லூர், கிழாய், கடலங்குடி, திருமங்கலம், காளி, இளந்தோப்பு, பட்டவர்த்தி, மண்ணிப்பள்ளம், சித்தமல்லி, திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளில் 12 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

Categories

Tech |