Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் விழுப்புரம் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி ரோடு, மாம்பழப்பட்டு ரோடு, வண்டிமேடு, வடக்குத் தெரு, விராட்டிக்குப்பம், கே. வி. ஆர். , நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்துார், ஓம் சக்தி நகர், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பில்லுார், ஆனாங்கூர், கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகர், கம்பன் நகர், பொய்யப்பாக்கம், மாதிரிமங்கலம், பானாம்பட்டு, நன்னாட்டாம்பாளையம், வி. அகரம், ஜானகிபுரம், வழுதரெட்டி ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும்.

தஞ்சை அருகே வல்லம் மின் நகர் பகுதி துணை மின் நிலையத்தில் இன்று  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெரும் வல்லம் சென்னம்பட்டி, மின் நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டத்தில் கானாடுகாத்தான், கல்லல் துணை மின் உப நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் ஆவுடைப்பொய்கை, ஓ சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி, சொக்கலிங்கம்புதூர், நங்கம்பட்டி, நேமத்தான்பட்டி, நெற்புகப்பட்டி, திருவேலங்குடி, சூரக்குடி, கல்லல், சாத்தரசன்பட்டி, செவரக்கோட்டை, கீழப்பூங்குடி, மேலப்பூங்குடி, கீழ புதுப்பட்டி, வெற்றியூர் நால்ரோடு, தண்ணீர் பந்தல், சொக்கநாதபுரம், புளியங்குடிப்பட்டி, மாலைகண்டான், DN கீழக்கோட்டை, ஆளவிளாம்பட்டி, மேலபட்டமங்கலம், சிலந்தங்குடி, பி. கருங்குளம் ஆகிய கிராமம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பெறும் உயரழுத்த மின் மின் தொடரில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையில் புதிய பேருந்து நிலையம், கேடிசி நகர், ஜெயராஜ் ரோடு, டூவிபுரம் 1, 2, 3வது தெரு, பழைய பேருந்து நிலையம், மீனாட்சிபுரம் ரோடு, பால விநாயகர் கோவில் தெரு, பங்களா தெரு மற்றும் ஜெய்லானி தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Categories

Tech |