நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை ஒன்பது மணிமுதல் மதியம் ஒரு மணிவரை கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் மணிமுத்தாறு வட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரிவலம்வந்தநல்லூர் உபமின் நிலையத்தில் காலை 9.00 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
கரிவலம்வந்தநல்லூர், பனையூர், கோமதிமுத்துபுரம், குவளைக்கண்ணி, எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய ஊர்களுக்கு மேற்கண்ட தேதியில் மேற்கண்ட நேரத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை என மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கேந்திர விஹார், தொழிற்சாலை மேக்னா எஸ்டேட் நூம்பல் மெயின் ரோடு பி. எச் ரோடு மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள பகுதிகளிலும் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்தடை என மின் வாரியம் அறிவித்துள்ளது மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை என மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ஆவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வைஷ்ணவி நகர், நேதாஜி நகர், வேணுகோபால் நகர், சோழம்பேடு, பூம்பொழில் நகர், திருமலைவாசன் நகர், பைபில் காலேஜ், கிரிஸ்ட் காலனி , கன்னட பாளையம் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள பகுதிகளிலும் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்தடை என மின் வாரியம் அறிவித்துள்ளது மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூா் பகுதியில் இன்று மின் விநியோகம் இருக்காது. கரிவலம்வந்தநல்லூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் கரிவலம்வந்தநல்லூா், பனையூா், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையான்குளம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் பகுதிகளில் இன்று (அக். 6) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
காரைக்குடி பகுதியில் வியாழக்கிழமை (அக். 6) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி துணை மின்நிலையத்தில் இன்று (அக். 6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் காரைக்குடி, பேயன்பட்டி, வீட்டுவசதிவாரியக் குடியிருப்பு (ஹவுசிங்போா்டு), செக்காலைக்கோட்டை, பாரிநகா், கல்லூரி சாலை, செக்காலை சாலை, புதிய, பழைய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, கோவிலூா் சாலை மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்சாரம் இருக்காது என்று காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் எம். லதாதேவி தெரிவித்துள்ளாா்.