தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (11.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி கோவில்பட்டி விஜயாபுரி உப மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் கெச்சிலாபுரம் மற்றும் மந்தித்தோப்பு 11 கி. வோ. மின்தொடரை 2 ஆகப் பிரிக்கும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று மீதமுள்ள பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே, இன்று காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி வரை கிழவிபட்டி, கெச்சிலாபுரம் பகுதிகளுக்கு மின்தடை ஏற்படும், என தூத்துக்குடி கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் தெரிவித்துள்ளார்.
தாராபுரம் மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் எஸ். கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாராபுரம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகள், வீராட்சிமங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், வண்ணாபட்டி, உப்பார்டேம், பஞ்சப்பட்டி, சின்னப்புத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் தடை செய்யப்படும்.
பழைய பேருந்து நிலையம், இந்திராநகர், அரண்மனைப்புதூர், சிடிசி, ஜிஹெச், வெள்ளியங்காடு, தென்னப்பாளையம், டிஎஸ்கே நகர், பெரிச்சிபாளையம், கேஜி பாளையம், தாராபுரம் சாலை, ஜீவாநகர், பாலாஜிநகர், பல்லடம் சாலை, பாரதிநகர், வித்யாலயம்,
பூலாங்கிணர், அந்தியூர், உடுக்கம்பாளையம், பாப்பனூத்து, வாளவாடி, தளி, ஆர்.வேலூர், குறிச்சிக்கோட்டை, டி.எம்.நகர், பாசோலை, விளாமரத்துப்பட்டி, கஞ்சம்பட்டி, குண்டல்பட்டி, சடையப்பாளையம், தேன்குமாரபாளையம் மப்பேடு படுவாஞ்சேரி, கஸ்பாபுரம் 1 பகுதி கோகுல், நகர், அகரம் பின்னர் அன்னை சத்திய நகர், வெல்கம் காலனி பிள்ளையார் கோயில் தெரு, குறிஞ்சி நகர் லட்சுமி நகர், கணேஷ் நகர், அலினிஜிவாக்கம், சாய்கிருபா நகர், இருளிப்பட்டு, ஜனபசத்திரம், பி.பி.ரோடு, ஜெகநாதபுரம் சாலை, அத்திப்பட்டு, விருந்தாவன் நகர். அரசூர், பெரியகாவனம், தச்சூர், வெள்ளோடை, அனுப்பம்பட்டு, கோடூர், இருளிப்பட்டு, ஜானப்பச்சத்திரம், ,ஜெகநாதபுரம், சத்திரம், அனாதார்குப்பம், தேவதானம், மாதவரம், ஆமூர் ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்காது.