தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துணை மின் நிலையம் மற்றும் கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று காலை 9.45 முதல் மாலை 4.00மணி வரை திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்படும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.
அதன்படி திருவெறும்பூர் மலை கோவில், பிரகாஷ் நகர், வேங்கூர், டி நகர், கூத்தைப்பார், கிருஷ்ணசமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூர் , திருவெறும்பூர் தொழில் பேட்டை , மேல குமரேசபுரம், சோழமாதேவி, சோழ மாநகர் நகர்,புது தெரு, நவல்பட்டு பர்மா காலனி ,நேரு நகர், அண்ணா நகர் போலீஸ் காலனி ,பூலாங்குடி, பாரதி நகர், 100 அடி ரோடு ,சூரியூர் கும்பக்குடி, பழங்கனாங்குடி, காந்தலூர், எம்.ஐ.டி, குண்டூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
மேலும் கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்படும் பகுதிகளான, K.K நகர் , இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர் நகர், ஐயப்ப நகர்,L.I.C காலனி, பழனி நகர், முல்லை நகர், R.V.Sநகர், ஒயர்லெஸ் ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதி நகர், காமராஜ் நகர், J.K. நகர், சந்தோஷ் நகர் ,ஆனந்த் நகர், கே சாத்தனூர் ஓலையூர், வடுகப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, காஜா நகர், சிம்கோ காலனி ஆகிய பகுதிகளில் மின்சாரம் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மருத்துவக் கல்லூரி, ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், ஆர்.ஆர்.நகர், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, காவேரி நகர், எலீசா நகர், நட்சத்திர நகர், நூற்பாலை, மாதாகோட்டை, சோழன் நகர், தமிழ்ப்பல்கலைக்கழகம், வஸ்தா சாவடி, பிள்ளையார்பட்டி, மொன்னையம்பட்டி, ஆலக்குடி, திருமலைசமுத்திரம், மானோஜிப்பட்டி, ரெட்டிபாளையம் சாலை, சிங்கப்பெருமாள் குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
அதேபோல தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்தத் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெரும் கும்பகோணம் நகரம் மற்றும் தாராசுரம், அண்ணலக்ரஹாரம், எலுமிச்சங்காபாளையம், திப்பிராஜபுரம், சிவபுரம், உடையாளூர், சுந்தரபெருமாள் கோவில், பண்டாரவாடை, நாச்சியார் கோவில், திருநாகேஸ்வரம், பட்டீஸ்வரம், வலங்கைமான், ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை கபிலா்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூா், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூா் செல்லப்பம்பாளையம், பெரியமருதூா், சின்னமருத்தூா், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீா்பந்தல், அண்ணாநகா், வீரணம்பாளையம், கொளக்காட்டுப்புதூா், நெட்டையாம்பாளையம், எஸ். கந்தளம், பொன்மலா்பாளையம், காளிபாளையம், ஆனங்கூா், சாணாா்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
திருப்பூர் மாவட்டம் வஞ்சிபாளையம் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை வஞ்சி பாளையம் , வெங்கமேடு , சாமந்தன்கோட்டை , செம்மாண்டம்பாளையம் , கோதபாளையம் , காவிளிபாளையம் , 15 வேலம்பாளையம் , கணியாம்பூண்டி , வலையபாளையம் , அனந்தபுரம் , செம்மாண்டம்பாளையம்புதூர் , முருகம்பாளையம் , சோளிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி மற்றும் நயினார்கோவில் துணை மின் நிலைய பராமரிப்பு பணி காரணமாக இன்று துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான சத்திரக்குடி, காமன்கோட்டை சேமனூர் , உலையூர், கோடரேந்தல், நயினார்கோவில், வல்லம், பகைவென்றி, வாத 21 நேரி, நகரம், பாண்டியூர் மற்றும் உதயகுடி ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மழைக்கால அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோரிப்பாளையம், தல்லாகுளம், மேலமடை பகுதிகளில் இன்று காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என்று, மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடைபடும் பகுதிகள்:
கோரிப்பாளையம்: செனாய் நகா், பனகல் சாலை, ஆழ்வாா்புரம், கக்கன் தெரு, புளியந்தோப்பு, ராமையா தெரு, வைத்திநாதய்யா் தெரு, திருவேங்கடபுரம், கோரிப்பாளையம், பட்டறைக்காரத் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, சின்ன கண்மாய், எச்.எ. கான் சாலை, இ2இ2 சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
தல்லாகுளம்: அழகா்கோவில் சாலையில் (ஐடிஐ முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை), அரசு மருத்துவமனை முதன்மையா் இல்லம், காமராஜா் நகா் 1 முதல் 4-ஆவது தெருக்கள், ஹா்சகான் சாலை, கமலா 1, 2-ஆவது தெருக்கள், சித்தரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, கோகலே சாலை, கண்மாய் மேலத் தெரு, தல்லாகுளம் மூக்கப்பிள்ளை தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
மேலமடை: கம்மாபட்டி, கோமதிபுரம் 1 முதல் 7 ஆவது தெருக்கள் வரை, மேலமடை, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, முகவை தெரு, மருதுபாண்டியா் தெரு, பாண்டிகோவில் பகுதியில் சில இடங்கள்.
கொட்டாம்பட்டி, ஒத்தக்கடை, வலையன்குளம் துணை மின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டாம்பட்டி துணை மின்நிலையம்: கொட்டாம்பட்டி, சின்னகொட்டாம்பட்டி, பள்ளபட்டி, புதுப்பட்டி, பொட்டப்பட்டி, முருக்கன்காடு, வெள்ளிமலை, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, மணப்பச்சேரி, வெள்ளனிப்பட்டி, புதூா், சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி, கருங்காலக்குடி சுற்றுவட்டார பகுதிகள்.
ஒத்தக்கடை துணை மின்நிலையம்: நரசிங்கம், வௌவால் தோட்டம், வேளாண்மைக் கல்லூரி, ராஜகம்பீரம், திருமோகூா், புதுதாமரைப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகள்.
வலையன்குளம் துணை மின்நிலையம்: எலியாா்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குருணி, நல்லூா், குசவன்குண்டு, மண்டேலா நகா், சின்னஉடைப்பு, கொம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்
நெல்லை பழையபேட்டைராம் நகர் மற்றும் ஊருடை துணை மின் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
வள்ளியூர் மின்வாரிய கோட் டத்திற்கு உட்பட்ட கோட்டைக்கருங்குளம், திசையன் விளை, வள்ளியூர் மற்றும் கூடங்குளம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் நெல்லை டவுன்மேல ரதவீதிமேல் பகுதிகள், தெற்கு ரதவீதி தெற்குப் பகுதிகள். வடக்குரத வீதி வடக்குபகுதிகள் பழையபேட்டை. காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத் தூர். பேட்டை, தொழில் பேட்டை, பாட்டப்பத்து. அபிஷேகபட்டி, பொருட் காட்சி திடல், நெல்லை டவுன், எஸ். என். ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சுந்தரர் தெரு. பாரதியார் தெரு. சி. என். கிராமம், குறுக்குத்துறை, கருப்பந்துறை, டவுன் கீழரத வீதி போஸ்ட் மார்க்கெட். ஏ. பி. மாடத்தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்தி முடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு மற்றும் தெரு, சத்தியமூர்த்தி தெரு. நயினார்குளம் மார்க்கெட், வ. உ. சி. தெரு, வையாபுரிநகர்.
வடக்கன்குளம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் கால்கரை, வேப்பிலாங்குளம், வடக்கு பெருங்குடி. தெற்கு பெருங்குடி, லெப்பைகுடியிருப்பு, வடக்கன்குளம், அழகநேரி, அடங்கார்குளம், சிவ சுப்பிரமணியபுரம், சங்குநகர், சுற்றுப்புற கிராமங்கள். தனியார் காற்றாலைகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
கோட்டைக்கருங்குளம், குமாரபுரம், வாழைத்தோட்டம், சீலாத்திகுளம், தெற்குகள்ளிகுளம், திசையன்விளை, திருவம்பலாபுரம், மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, வள்ளியூர். ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி, தெற்கு வள்ளியூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மின்தடை செய்யப் படுகிறது. மேலும் கூடங்குளம். இருக்கன்துறை, பொன்னார்குளம், சங்கனேரி, மேலவிஜயாபதி ஆகிய பகுதிகளில் [ இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது.
இதேபோல் களக்காடு, விஜயாபதி ஆகிய துணை மின்நிலையத்தில் வருகிற 29 ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், கோதைசேரி, வன்னியன்குடியிருப்பு, சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம் மற்றும் பக்கத்து கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரையும், விஜயாபதி, இடிந்தகரை, ஆவுடையாள்புரம், முருகானந்தபுரம், கூத்தன்குழி, உதயத்தூர், சிதம்பராபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினார்குளம் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது.