Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விபரம்…..!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள கோட்டமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால், இன்று  காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை கோட்டமங்கலம் வெள்ளியம்பாளையம் அய்யம்பாளையம் புதூர், முருங்கப்பட்டி குடிமங்கலம் நால் ரோடு( மேற்கு ) சிட்கோ, வேலப்ப நாயக்கரின் புதூர், வரதராஜபுரம், குமாரபாளையம், பொன்னேரி, சுண்டாம்காம்பாளையம் மற்றும் சுங்கார முடக்கு (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது . விருதுநகர் மாவட்டத்தில் மின் பாதை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை கால்நடை மருத்துவமனை சாலை, ரோசல்பட்டி, அரண்மனைக்காரதெரு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.மதியம் ஒரு மணிக்குள் மின் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |