Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் ரயில் சேவை ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று  முதல் மின்சார ரயில்கள் இரவு 10 மணிக்கு மேல் இயக்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை எந்த நிலையத்திலும் இருந்தும் ரயில்கள் இயக்க படாது. முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கில் ஒரு பங்கு அளவில் மின்சார ரயில்கள் இயக்கப்படும். அதாவது வார நாட்களில் 434 புறநகர் ரயில்களும், ஞாயிற்றுக்கிழமை 86 ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |