Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று முதல் 19ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யலாம்..!!

தமிழகத்தில் இன்று முதல் 19ஆம் தேதி வரை மிதமான மழையும், 20 ஆம் தேதி கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 18 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 19ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு மிதமான மழையும், 20ஆம் தேதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 20ஆம் தேதி திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

Categories

Tech |