Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களில்….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதனால் நாளை நள்ளிரவு முதல் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது 3 லட்சம் கொரோனா தடுப்பூசி இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப் படும் பட்சத்தில், இன்று முதல் மூன்று நாட்களில் தடுப்பூசி தீர்ந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு அனுப்பியுள்ள ஒரு லட்சம் தடுப்பூசி விரைவில் தீர்ந்து விடும் என்பதால் கொரோனா அதிகரித்து வரும் சூழலில் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |