தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 3 தினங்களுக்கு வழிபாட்டு தலங்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்கள் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டன. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் கோவில்கள் திறக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.