Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு…. 14 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. அலர்ட்….!!!?

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று முதல் 3 நாட்களுக்கு 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 18ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குமரிக்கடல், தெற்கு அரபிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடாஆகிய பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |