தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக அறிவிப்பு வெளியானது.மேலும் மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புக்கு மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பதிவு கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் விமான நிலையங்களுக்கு செல்ல இன்று முதல் இ-பதிவு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து ரயில் நிலையம் செல்வோர்,அங்கிருந்து மறுபடியும் வீடுகளுக்கு வருவோர் பயணச்சீட்டு மற்றும் அடையாள அட்டையுடன் கூடிய இ-பதிவு கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.