Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல்…. கூடுதல் தடுப்பூசிகள் கொள்முதல்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ரூ.39.05 கோடி செலவில் தடுப்பூசிகளை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது. அதனால் தமிழகத்திற்கு இன்று  முதல் கூடுதலாக கொரோனா தடுப்பு ஊசிகள் வர உள்ளன. இந்த மாதத்தின் இறுதிக்குள் 42.58 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வர உள்ளது. இன்று  63,370 கோவிஷில்டு தடுப்பூசிகளும், நாளை  40 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளும் வர உள்ளது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குள் தடுப்பூசி தட்டுப்பாடு நீங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |