தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கணமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாமல் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். வருகின்ற 7-ம் தேதி வரை லட்சத்தீவு பகுதி, கர்நாடகா மற்றும் கேரள கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு,மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Categories