தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை பெருநகரில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.