குமரி கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ததற்கான வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் எனும் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானல் படகு குளம் 13, சின்ன கல்லார் 10, குமாரபாளையம் பொன்னகரம், பென்பரநாடு தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இன்று குமரி கடலில் தெற்கு பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.