Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் மிக கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இதுவரை மாற்றமில்லாமல் நிலவுகிறது. அதனால் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக மேலும் 24 மணி நேரம் கூடுதலாகும். இதையடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு உருவாகும் பட்சத்தில், தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நாகை, ராமநாதபுரம் மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், டெல்டா மாவட்டங்கள், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் சென்னையில் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது.

Categories

Tech |