Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் தொடக்கம்… உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்… குவியும் கூட்டம்…!!!

தமிழகத்தில் உள்ள அருங்காட்சியகங்கள் இன்று முதல் திறக்கப்படுவதால் மக்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் நாளை முதல் அருங்காட்சியகங்கள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு  வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பது, ” அருங்காட்சியகத்திற்கு வருகின்ற பார்வையாளர்கள் அனைவரும் கைகளை சுத்தம் செய்த பின்னரே உள்ளே நுழைய வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும். அருங்காட்சியக நுழைவு வாயிலில் வெப்ப பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

அருங்காட்சியகத்துக்கு வருகின்ற பார்வையாளர்கள் அனைவரும் எந்த பொருளையும் தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அருங்காட்சியகத்தில் கொரோனா தடுப்பு விதிகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்று குழு கட்டாயம் கவனிக்க வேண்டும். அருங்காட்சியகம் திறப்பு நேரத்தை மேலும் 30 நிமிடம் அதிகரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |