தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. நீர்நிலைகள் நிரம்பி.வழிந்தது இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. ஆனால் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே மழை சற்று குறைய தொடங்கியது. ஒரு சில பகுதிகளில்மட்டும் லேசான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் குறைவாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுபோல இன்று முதல் மாநிலம் முழுவதும் பனிமூட்டம் காணப்படும். இன்றும் நாளையும் குமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் எனவே மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.