Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் அனைத்து பள்ளிகளும் இயங்கும்….. வெளியான முக்கிய தகவல்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளியை சுற்றிய பகுதிகளில் பெரும் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் இன்று முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |