தமிழகத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது வழக்கம். ஏனென்றால் மின் கம்பங்களில் ஏற்படும் மின்கசிவின் காரணமாக,சில நேரங்களில், விபத்துகள் ஏற்படுகிறது.எனவே இதை தவிர்ப்பதற்காக இந்த பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகமானது தடை செய்யப்படுகிறது. மேலும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே, இந்த அறிவிப்புகளும் கொடுக்கப்படும்.
அதன்படி, தமிழ்நாட்டில் காங்கேயம் கோட்டத்தில் உள்ள ஓலப்பாளையம், ராசாத்தாவலசு, சிவன்மலை, ஆலம்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (மே 16) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு காங்கேயம் பகுதி மின்வாரிய செயற்பொறியாளர் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.
மேலும் ஓலப்பாளையம் துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள வீரசோழபுரம், மாடன் வலசு, பச்சாபாளையம், பாப்பினி பகுதிகளிலும் மற்றும் ராசாத்தாவலசு துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளான எம்.ஜி.ஆா். நகர், அனுமந்தபுரம், சேமலை கவுண்டன் வலசு, முத்தூா் சாலையிலும் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
இதையடுத்து சிவன்மலை துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளான சாவடிப்பாளையம், படியூர், ராசாபாளையம், காரக்காட்டுப்புதூா், செல்லப்பம்பாளையம், ரெட்டிவலசு, செம்மங்குழிபாளையம், கணபதிபாளையம் போன்றவற்றிலும், மேலும் ஆலம்பாடி துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள ராசிபாளையம், மறவபாளையம், நால்ரோடு, சாவடி, திட்டம்பாளையம் மற்றும் செம்மங்குழிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், இன்று மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.