Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ரெட் அலர்ட்…. 32 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழக மற்றும் புதுச்சேரியை நெருங்குவதால் தமிழகத்திற்கு இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று 32 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை காண ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடா,குமரி கடல் பகுதிகள் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூரை காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |