Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 10.00 AM சம்பவம்…. பாஜக அண்ணாமலை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக வாக்குறுதியில் அறிவித்த படி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 72 மணி நேரத்தில் குறைக்கவில்லை என்றால் கோட்டையை முற்றுகை இடுவோம் என்று பாஜக அண்ணாமலை கடந்த மே 22ஆம் தேதி அறிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்காத திமுக அரசை கண்டித்து இன்று திட்டமிட்டபடி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 5 ரூபாய் குறைக்க வேண்டும் என அண்ணாமலை வைத்த 72 மணிநேர கெடு வைத்து திமுக அரசு கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் மாபெரும் பேரணியுடன் போராட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |