தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 29ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை தொடர்ந்து பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, திருப்பூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை உட்பட 11 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் டெல்டா மாவட்டங்களான தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல சென்னையில் 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.