Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்..!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூரில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக மேட்டுப்பட்டியில் 17, பஞ்சபட்டியில் 12, ஆணை மடுவு அணையில் 10 சென்டிமீட்டர் மழையும், தம்மம்பட்டி மற்றும் புலிப்பட்டியில் தலா 9, மயிலட்டி மற்றும் திருப்பத்தூரில் தலா 8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Categories

Tech |