தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்காலில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல தென்மேற்கு வங்க கடல் பகுதியில் 9ஆம் தேதியன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் 9ஆம் தேதி தெற்கு வங்க கடலில் மத்திய பகுதி, அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.