Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அக்டோபர் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் அதன் எதிரொலியாக சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், ஈரோடு,சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மலைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |