Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.!!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அதேபோல விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று கூறியுள்ளது.

மேலும் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வந்தது.. அதனால் அந்த  மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |