Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…..!!!?

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் சில பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் லேசான மழையும், நீலகிரி, தேனி, குமரி, நெல்லை மட்டும் தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.

நாளை முதல் 11 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |