தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக வட தமிழகம் மாவட்டங்கள் தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மழைக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.