தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 26 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது.. நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். வட கிழக்கு – மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை மாலை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.