கன்னியாகுமரி மாவட்டத்திற்கு (நவம்பர் 1ஆம் தேதி) இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தோடு குமரி மாவட்டம் இணைந்த தினத்தை முன்னிட்டு நவம்பர் 1ஆம் தேதி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக வருகிற 12-ம் தேதி அன்று குமரி மாவட்டத்தில் அரசு வேலை நாளாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Categories