Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(20.8.22) இங்கெல்லாம் மின்தடை….. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (20-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம்:

அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, பந்தல்குடி, வேலாயுதபுரம், பெரிய புளியம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 20-ந் தேதி நடைபெற உள்ளது. ஆதலால் அருப்புக்கோட்டை, புளியம்பட்டி, வேலாயுதபுரம், பந்தல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் கூறினார்.

கோவை மாவட்டம்:

கோவை மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக சில இடங்களில் மின் தடை செய்யப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு, முத்துக்கவுண்டன் புதூர் துணை மின் நிலையத்தில் வருகிற 20-ந் தேதி பராமரிப்பு பணி நடைபெறுவதால் அங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. அதன்படி நீலாம்பூர், அண்ணா நகர், லட்சுமி நகர், குளத்தூர், முத்துக்கவுண்டன் புதூர் ரோடு, பைபாஸ் ரோடு ஒரு பகுதி, குரும்ப பாளையம் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

உக்கடம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு 20-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. அதன்படி வெரைட்டி ஹால் ரோடு பகுதி, டவுன்ஹால் பகுதி, தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதிகள், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் ரோடு, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர் மற்றும் டாக்டர் முனிசாமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ஸ்டேட் பேங்க் ரோடு, கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம் பகுதிகள், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை, உக்கடம் பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளது.

நெடுஞ்சாலைத்துறை மூலம் உக்கடத்தில் நடைபெறும் மேம்பால பணிகள் விரைவாக முடிக்கும் பொருட்டு உயர் அழுத்த மின் கோபுரம் மற்றும் மின் பாதைகளை அகற்றி புதியதாக அமைக்கப்பட்டு உள்ள 110 கி.வோ. புதைவட கேபிள் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சூலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு 20-ந் தேதிஇன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்பட உள்ளது. சூலூர், டி.எம். நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ். நகர், கண்ணம் பாளையம், காங்கேயம் பாளையம், ராவத்தூர் பகுதிகளில் அன்று மின் தடை செய்யப்பட உள்ளது.

நெல்லை மாவட்டம்:

பாளை மற்றும் மேலப்பாளையம் துணைமின்நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின்தடை ஏற்படும் இடங்கள்

மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுண் ரோடு, அண்ணாவீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பெருமாள்புரம். பொதிகைநகர், அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஓ. காலனி), அன்பு நகர்,

மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகர், பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, வி.எம்.சத்திரம்,

கட்டபொம்மன் நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், திம்மராஜபுரம். சமாதானபுரம், கீழநத்தம், பாளை பஸ் நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, அன்புநகர் மற்றும் முருகன்குறிச்சி ஆகிய பகுதிகளில மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலக்கல்லூர்

இதேபோல் மேலக்கல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மேலக்கல்லூர், சேரன்மகாதேவி, சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லூர், பழவூர், கருங்காடு, திருப்பணி கரிசல்குளம், துலுக்கர்குளம், வெள்ளாளன்குளத்தில் மின்வினியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |