தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (23.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மதுரை
கொட்டாம்பட்டி துணை மின் நிலையத்தின் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கொட்டாம்பட்டி சின்ன கொட்டாம்பட்டி பொட்டபட்டி வெள்ளிமலை, முடுக்கன் காடு, தொந்தலிங்கபுரம், சொக்கம்பட்டி, மனப்பேச்சேரி, வெள்ளினிபட்டி, வி. புதூர் சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி பள்ளப்பட்டி, புதுப்பட்டி கருங்காலக்குடி, மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தேனி, ஆண்டிப்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளான சக்கம்பட்டி, பாப்மால்புரம், ஜெ. ஜெ நகர், கொண்டமநாயக்கன்பட்டி, காமராஜர் நகர், ஆண்டிபட்டி முக்கிய வீதிகள், உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் 4 மணி வரை மின் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயல் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
தெற்கு அவினாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிழக்கு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கொடுவாய் , வெள்ளியம்பாளையம் , வினோபா நகர் , கொசவம்பாளையம் , கருணைபாளையம் பிரிவு , செங்கோடம்பாளையம் , அய்யம்பாளையம் , பள்ளிபாளையம் , கோவில்பாளையம் , தொட்டிபாளையம் , பொல்லிக்காளிபாளையம் , தெற்கு அவினாசிபாளையம் , வடக்கு அவினாசிபாளையம் ஒரு பகுதி , அலகுமலை ஒரு பகுதி மற்றும் உகாயனூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
சேலம் அஸ்தம்பட்டி துணை மின்நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. அஸ்தம்பட்டி, காந்தி ரோடு, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு, சின்னதிருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புதுஏரி, ஹவுசிங்போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், 4ரோடு, மிட்டா பெரியபுதூர், சாரதா கல்லூரி ரோடு, செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம், ஏற்காடு. ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.