தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும் திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாரு தூய சவேரியார் பேராலய திருவிழா இன்று(3.12.22) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று(3.12.22) அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்த்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 28-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.