தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து பாதிப்புகளை அறிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து மக்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் கருத்து தெரிவிக்கலாம் என ஏ.கே ராஜன் குழு அறிவித்துள்ளது. அதன்படி இன்று கடைசி நாள் என்பதால், மக்கள் தங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கலாம். தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் மக்களின் கருத்தை ஏ.கே ராஜன் குழு கேட்கிறது.