Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இப்படி ஒரு மாற்றமா?…. புகைப்படமோ, பேனர்களோ இல்லை…. குவியும் பாராட்டு….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட பணிகளுக்காக  கோவையில் இரண்டு நாட்கள் முகாமிட இன்று மதியம் கோவை சென்றார். அங்கு சென்ற அவருக்கு வழி நெடுக திமுக தொண்டர்களும் பொதுமக்களும் வரவேற்பு கொடுத்த நிலையில், சாலைகளில் வரவேற்பு பேனர்கள் காணப்படாதது வியப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் பங்கேற்கப் போகும் நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ள மேடையிலும் முதலமைச்சர் ஸ்டாலின் படம் இடம் பெறாதது வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் வருகையை ஒட்டி கோவையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

முதலமைச்சரின் கோவை வருகை வித்தியாசமான முறையில் காணப்படுகின்றது. அவரை வரவேற்க எங்கும் பேனர் மற்றும் போஸ்டர்கள் காணப்படாத நிலை உள்ளது. அதுமட்டுமன்றி விழா மேடையில் முதல்வர் ஸ்டாலின் உருவப்படம் கூட இடம் பெறாதது மகிழ்ச்சியையும் வியப்பையும்  ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஸ்டாலின் பயணத்திற்கு வழி எங்கும் பேனர்கள் இல்லாததையும் “பாராட்டத்தக்க மாற்றம்” என்றும் “இந்த நிலை நீடித்தால் நல்லது” என்றும் குறிப்பிட்டு மக்கள் பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Categories

Tech |